புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2019 (12:28 IST)

மனைவி, மருமகள் குடும்பத்தோட ரோட்டுக்கு வந்த ஓபிஎஸ்: எல்லாம் இதுக்குதான்!!

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். மகன் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என குடும்பத்தோடு வீதியெங்கும் பிரச்சாரம் செய்து வருகிறார் பன்னீர் செல்வம். 
 
தேனியில் ரவீந்திரநாத்துக்கு போட்டியாக அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் என பலம் வாய்ந்த போட்டியாளர்கள் இருக்கிறார்கள். கட்சி வேட்பாளர் தோற்பது வேறு, பெற்ற மகன் தோற்பது வேறு. இதனால், ஓபிஎஸ் தனது மனவி, மருமகள் என குடும்பத்தோடு தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்தார். 
தற்போது அவர் மற்ற தொகுதியில் பிரச்சாரம் செய்ய தேனிவிட்டு நகர்ந்துள்ளார். எனவே, அவரின் மனைவி ஒரு பக்கம், மருமகள் ஒரு பக்கம் என தேனியில் ஒரு இடம் பாக்கி விடாமல் வாக்கு சேகரித்து வருகின்றனர். 
 
மேலும், தேனியில் கள்ளர் சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகம் என்பதால் ஓபிஎஸ் சற்று கலக்கத்தில் உள்ளாராம். ஏனென்றால் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் அந்த சமூகத்தை சேர்ந்தவர்.