திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (21:05 IST)

வயநாடுக்கு படையெடுக்கும் சோனியா, பிரியங்கா! ராகுலுக்காக பிரச்சாரம்

வரும் மக்களவை தொகுதியில் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திடீரென கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்தார். அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி போட்டியிடுவதால் தோல்வி பயம் காரணமாகவே ராகுல் காந்தி இரண்டாவது தொகுதியில் போட்டியிடுவதாக பாஜக விமர்சனம் செய்தது
 
ஆனால் தன்னுடைய சேவை தென்னிந்தியாவுக்கு தேவை என்பதால் கேரளாவில் போட்டியிடுவதாக ராகுல்காந்தி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விளக்கம் அளித்தார்.
 
இந்த நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிட நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 4ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய ராகுல்காந்தி வயநாடு வரவிருக்கின்றார். அவருடன் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தியும் வரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மேலும் வயநாடு தொகுதியில் ராகுல்காந்திக்காக பிரச்சாரம் செய்ய சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் விரைவில் வரவிருப்பதாகவும்,  ராகுலுக்காக தொகுதி முழுவதும் சில நாட்கள் அவர்கள் தீவிர பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது