செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (14:36 IST)

நாடாளுமன்ற தேர்தல் 2019: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - ஒரு பார்வை!

நாடாளுமன்ற தேர்தலை நெருங்கியுள்ள நிலையில் இன்று தேர்தல் அறிக்கையை தலைமை கட்சி அலுவலகத்தில் வெளியிட்டார் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி. 
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.
 
தேர்தல் அறிக்கையின் 5 முக்கிய அம்சங்கள்:
1. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் (MNREGA) 150 நாட்களாக அதிகரிக்கப்படும். 
 
2. ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய், 5 ஆண்டுக்கு 3,60,000 ரூபாய் வழங்கப்படும்.
 
3. மத்திய அரசிலுள்ள 22 லட்ச காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
 
4. விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் போடப்படும்.
 
5. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
தேர்தல் அறிக்கையில் கவனிக்கப்பட வேண்டியவை: 
1. தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் 2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும்.
 
2. பொதுத் துறை நிறுவனங்களில் 34 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம்.
 
3. பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும்.
 
4. தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் வன்முறை, கும்பல் கொலை உள்ளிட்ட வெறுப்பு குற்றங்களை தடுக்கப்படும்.
 
5. 2023-24 ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படும்.
6. 2023 - 24 ஆம் ஆண்டிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்.
 
7. மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்படும்.
 
8. காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சுதந்திரமான சுற்றுசூழல் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.