வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (17:30 IST)

நீங்கள் ஒரு முட்டாள்....ரசிகரை திட்டிய மும்பை அணி வீரர்

ஐபிஎல்-2021;  14 வது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் கடந்த 4 போட்டிகளில் முன்னாள் சேம்பியன் மும்பை அணி 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

மும்பை அணி புள்ளிப்பட்டியளில் 4 வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் பெங்களூர் அணி முதலிடத்திலும், சென்னை 2 ஆம் இடத்திலும், டெல்லி அணி 3 வது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள  நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மெக்லாகன் தனது டுவிட்டர் பக்கத்தில். 4 வது இடத்தில் உள்ள மும்பை அணி எந்த இடம் பிடிக்கும் எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு ஒரு ரசிகர் கடைசி இடம் பிடிக்கும் எனக் கூறினார்.

இதைப்பார்த்து நிதானம் இழந்த மெக்லாகன் நீங்கள் என்ன முட்டாளா எனப் பதிவிட்டார்.
இதற்கு ரசிகர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.