செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:19 IST)

ரஜினிக்காக தண்டவாளத்தில் தலை வைத்த முட்டாள் ரசிகர்! வடிவுக்கரசி பகிர்ந்த சம்பவம்!

நடிகை வடிவுக்கரசி அருணாச்சலம் படத்தில் வில்லியாக நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக குணச்சித்திர மற்றும் வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் வடிவுக்கரசி. இவர் அருணாச்சலம் படத்தில் ரஜினிக்கு பாட்டியாக வில்லத்தனமான நடிப்பை வழங்கி இருப்பார். இந்நிலையில் அந்த படம் ரிலீஸான போது ரஜினி ரசிகர்கள் வடிவுக்கரசியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இதனால் அவர் ஒரு மாத காலம் வரை தலைமறைவாக இருந்ததாக சொல்லியுள்ளார்.

மேலும் ஒரு முறை ரயில் பயணம் மேற்கொண்ட போது ரஜினி ரசிகர் ஒருவர் அவர் இருப்பதை தெரிந்துகொண்டு தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு வடிவுக்கரசி ரஜினியை அனாதை எனத் திட்டியதற்கு மன்னிப்புக் கேட்டால்தான் எழுந்திருப்பேன் என சொல்லி மிரட்டியுள்ளார். இதையடுத்து வடிவுக்கரசி அவரிடம் மன்னிப்புக் கேட்டாராம்.