வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (11:50 IST)

எங்களை பாத்தா முட்டாள் மாதிரி தெரியுதா? – ரஜினியால் கடுப்பான சீமான்!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நிலையில் தமிழக மக்களை முட்டாள்கள் என நினைத்தீர்களா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை ஜனவரியில் தொடங்குவதாக அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த அறிவிப்புக்கு பலர் வரவேற்பு அளித்து வரும் அதேசமயம் பலர் எதிர்ப்புகளும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ”நடிகர் ரஜினிகாந்த் இதுவரை எத்தனை மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துள்ளார்? தீர்வு சொல்லியுள்ளார்? இவர் சொன்னதும் மாறிவிட தமிழக மக்கள் முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ரஜினி மக்கள் மன்றத்தில் எவ்வளவோ நிர்வாகிகள் இருந்தும் கட்சி தலைமை செயலாளராக பாஜகவை சேர்ந்த ஒருவரை கொண்டு வந்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.