1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 ஏப்ரல் 2021 (09:00 IST)

முட்டாள்கள் தினத்தில் ராக்கெட்ரி டிரைலர் ரிலீஸ் ஏன்? மாதவன் விளக்கம்!

மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படத்தின் டிரைலர் ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினத்தில் வெளியானது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.  இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து இப்போது ரிலிஸுக்கு தயாராக உள்ளது. ரிலிஸூக்கு சரியான நேரம் பார்த்து காத்திருக்கிறார் மாதவன். இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி ராக்கெட்ரி படத்தின் டிரைலர் அனைத்து மொழிகளிலும் வெளியானது.

முட்டாள்கள் தினத்தில் ஏன் ராக்கெட்ரி டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டது என மாதவன் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘ஒருமுறை விஞ்ஞானி நம்பி நாராயணனோடு உரையாடிக் கொண்டிருந்த போது ’தேசப்பற்றினால் பாதிக்கப்பட்டு முட்டாளானவர்கள் எவ்வளவு பேர் மாதவன்?’ எனக் கேட்டார். இந்த முட்டாள்கள் தினத்தில் அதிகமாக கவனம் பெறாத நம்பி நாராயணன் என்கிற ஹீரோவைப் போற்றுவதன் மூலம், அப்படியான முட்டாள்களுக்கு எங்கள் காணிக்கையைச் செலுத்துகிறோம்’ எனக் கூறியுள்ளார்.