புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:55 IST)

பெரியாரை பின்பற்றுவதால் கமலும் முட்டாள்தான்… ஹெச் ராஜா சர்ச்சை பேச்சு!

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா  கமல்ஹாசன் ஒரு முட்டாள் எனக் கூறியிருப்பது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

தேர்தல் முடிந்து வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பூத்களின் அருகே ஆண்டனா வைத்த கண்டெய்னர் லாரிகள் நின்றது சந்தேகத்தைக் கிளப்பியது. இது சம்மந்தமாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் சந்தேகங்களை எழுப்பி இருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா ‘கம்ல்ஹாசன் நடிப்பில் மட்டுமே பெரியவராக இருக்கிறார். பெரியாரைப் பின்பற்றுவதால் மற்ற விஷயங்களில் அவர் முட்டாள்தான். ஸ்டாலின் முட்டாள் என தெரியும், இன்று தமிழ்நாடு முட்டாள்களின் உலகமாக மாற்றப்பட்டுள்ளது.’ எனக் கூறியுள்ளார்.