1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By siva
Last Updated : வியாழன், 7 அக்டோபர் 2021 (07:57 IST)

சாம் கர்ரனுக்கு பதில் இவர்தான்: சிஎஸ்கே அறிவிப்பு!

சாம் கர்ரனுக்கு பதில் இவர்தான்: சிஎஸ்கே அறிவிப்பு!
சிஎஸ்கே அணியின் சுட்டிகுழந்தை என்று கூறப்படும் சாம் கர்ரன் காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளதை அடுத்து அவருக்கு பதிலாக மேற்கிந்திய தீவு வீரர் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார்.
 
சாம் கர்ரன் விலகியதால் அவருக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் டோமினிக் ட்ரேக்ஸ் என்பவரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
ஏற்கனவே இவர் சிசிஎல் தொடரில் பிராவோ தலைமையில் தொடரை வென்றது பெரிதும் உதவியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்துவீச்சாளர் மற்றும் பேட்டிங்கிலும் திறமை உடைய இவரை அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.