டெல்லி அணிக்கு 186 இலக்கு கொடுத்த கொல்கத்தா!

Last Modified சனி, 30 மார்ச் 2019 (22:22 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது நடைபெற்று வரும் 10வது போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன
டெல்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது.

ரஸல், தினேஷ் கார்த்திக் ஆகியோர்களின் அபார பேட்டிங் காரணமாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 185 ரன்கள் குவித்துள்ளது. ரஸல் 28 பந்துகளில் 62 ரன்களும், தினேஷ் கார்த்திக் 36 பந்துகளில் 50 ரன்களும் எடுத்துள்ளனர்.
டெல்லி அணியின் பட்டேல் 2 விக்கெட்டுக்களையும், ரபடா, லாமிச்சேன், மோரிஸ், மிஷ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்த நிலையில் 186 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் டெல்லி அணி சற்றுமுன் வரை 3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :