செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (12:19 IST)

சென்னை பிட்ச் டி 20 போட்டிகளுக்கு உதவாது – ராபின் உத்தப்பா கருத்து !

சென்னை போன்ற குழிப்பிட்ச்கள் டி20 போட்டிகளுக்கு உதவாது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

12 ஆவது ஐபிஎல் லின் முதல் போட்டி பரபரப்பாக பேசப்பட்டது. காரணம் தோனி தலைமையிலான சென்னை அணியும் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதுவதால் வாணவேடிக்கை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோசமானப் பிட்ச் காரணமாக ஆட்டம் படு திராபையாக முடிந்தது. பெங்களூர் அணி நிர்ணயித்த 70 ரன்களை சென்னை அணிப் போராடி 17 ஓவர்களில் வெற்றி பெற்றது.

இதனால் ஆடுகள வடிவமைப்பாளர்கள் மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி கூட ஆடுகளம் குறித்து விமர்சனங்களை வைத்தார். இந்நிலையில் ராபின் உத்தப்பா சென்னை போன்ற குழிப்பந்துகள் மைதானம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில் ’ டி20 கிரிக்கெட் பொழுதுபோக்கு அம்சத்துக்காக உருவாக்கப்பட்டது,  பந்துகள் பயங்கரமாகத் திரும்பும் குழிப்பிட்ச்கள் டி20 கிரிக்கெட் பார்வையாளர்களை ஈர்க்காது. இருதரப்புக்கும் பேட்டுக்கும் பந்துக்குமான போட்டி சமமாக இருக்க வேண்டும். மந்தமான பிட்ச்கள் பரவாயில்லை, ஆனால் சென்னையில் போடப்பட்டது போன்ற குழிபிட்ச் அல்லது பயங்கரமாக பந்துகள் திரும்பும் ஆட்டக்களங்கள் டி20 கிரிக்கெட்டுக்குச் சரிபட்டு வராது.’ எனத் தெரிவித்துள்ளார்.