தூக்க மாத்திரை இல்லாமல் தூங்குவதற்கு என்ன வழி..!
ஒரு சிலர் தூக்கம் வரவில்லை என்பதால் தூக்க மாத்திரையை போட்டு தான் தூங்குவார்கள் என்பதும் தூக்க மாத்திரை இல்லாமல் அவர்களுக்கு தூக்கம் வராது என்ற நிலை ஏற்பட்டு விட வேண்டும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தூக்க மாத்திரை இல்லாமல் தூங்குவதற்கு சிறந்த வழி என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம். தூக்கம் வராததற்கு பல காரணங்கள் உள்ளது. ஏதாவது ஒன்றை யோசித்துக் கொண்டே இருப்பது, உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அந்த பிரச்சினை நம்முடைய எதிர்காலத்தை பாதிக்குமா என்ற பயத்தில் இருப்பது ஆகியவை தூக்கம் வராததற்கு காரணங்கள் ஆகும்.
தூங்கும் இடம் மற்றும் சுற்றுப்புற சூழல் காரணமாகவும் தூக்கம் வராமல் இருப்பது ஒன்று. எனவே தூங்கப்போவதற்கு முன் சுடநீரில் குளியல் போடுவது நல்லது. அதேபோல் தியானம் பண்ணுவதும் நல்லது
மேலும் பகல் நேரத்தில் நன்றாக உடல் உழைப்பு உள்ள வேலைகளை செய்ய வேண்டும். ஒருவேளை உடல் உழைப்பு வேலை இல்லை என்றால் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
மேலும் செல்போன் லேப்டாப் கம்ப்யூட்டர் போன்ற கருவிகளை இரவு நேரத்தில் பயன்படுத்தக்கூடாது. காபி போன்ற பானங்களை இரவு நேரத்தில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
தலையணை படுக்கை பெட்ஷீட் ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் இப்படியும் தூக்கம் வரவில்லை என்றால் 50 முதல் 1 வரை வரை ஒருங்கிணைந்த மனதோடு எண்ணினால் தூக்கம் வந்துவிடும்.
Edited by Mahendran