செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (18:31 IST)

சிரங்கு, சொறி, அரிப்பு பிரச்சனையா? இந்த ஒரு இலை போதும்..!

Kuppaimeni
சிரங்கு, சொறி, அரிப்பு  போன்ற தோல் நோய் போல இருந்தால் அதை குணப்படுத்த குப்பைமேனி இலை போதும் என்று கூறப்படுகிறது.
 
 படை சிறகு சொறி அரிப்பு போன்ற தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கழுவி வந்தால் அனைத்து நோய்களும் குணமாகும் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் சொத்தைப்பல் உள்ளவர்கள் பல்லில் வலி இருந்தால் இரண்டு அல்லது மூன்று குப்பைமேனி இலைகளை நன்றாக கழுவி விரல்களால் நசுக்கி பல்லில் வைத்தால் சொத்தைப்பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி வலி நீங்கும் என்றும் கூறப்படுகிறது. 
அதேபோல் தேள்,பூரான் போன்ற விஷ பூச்சிகள் கடித்தால் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூச்சிகள் கடித்த இடத்தில் வைத்தால் விஷம் முறிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran