மழைநீர் வடிகால் வழியாக கழிவுநீர் வெளியேற்றம்: மக்களே கண்டுபிடித்து புகார்..!
மழைநீர் வடிகால் வழியாக கழிவு நீரை அலுமினிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று வெளியேற்றியதை மக்களே கண்டுபிடித்து புகார் அளித்துள்ள நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அலுமினிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று அந்நிறுவனத்தின் கழிவு நீரை மழை நீர் வடிகால் வழியாக வெளியேற்றியதாக புகார் எழுந்தது.
இந்த புகாரை அடுத்து மக்களை அதை கண்டுபிடித்து தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சமீப காலமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் களப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த மக்களின் முயற்சியால் அலுமினிய நிறுவனம் மட்டுமின்றி இதுவரை 11 நிறுவனங்களின் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்களை மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்புகளை துண்டித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Edited by Mahendran