1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2023 (17:14 IST)

கருத்தடை மாத்திரை உபயோகித்த 16 வயது சிறுமி உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!

மாதவிடாய் வலியை குறைப்பதற்கு நண்பர்கள் பேச்சை கேட்டு கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இங்கிலாந்து நாட்டில் நடந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு மாதவிடாய் வலி அதிகமாக இருந்ததை அடுத்து வலியை குறைப்பதற்கு நண்பர்களின் பேச்சை கேட்டு கருத்தடை மாத்திரை உட்கொண்டார். 

கருத்தடை மாத்திரை உட்கொண்ட சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார். அவரது மூளையில் ரத்தம் உறைந்து உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

மாதவிடாய் வலியை குறைப்பதற்கு நண்பர்கள் பேச்சை பேச்சை கேட்டு கருத்தடை மாத்திரை எடுத்து, பரிதாபமாக உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். இருப்பினும் இந்த சோகத்திலும் அவர்கள் உயிரிழந்த சிறுமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran