புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 21 செப்டம்பர் 2019 (12:00 IST)

சூடுபிடிக்காத விற்பனை; வேலைக்கு ஆகாத ஐபோன்!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 சீரிஸ் சமீபத்தில் அறிமுகமான நிலையில் இதன் விற்பனை மந்த நிலையில் உள்ளதாம். 
 
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என ஐபோன் 11 சீரிஸ் போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனையை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கொண்டு வந்தது. 
 
எப்போதும் ஆப்பிள் போன் அறிமுகங்களின் போது நூற்றுக்கணக்கில் மக்கள் சிபோனை முன்பதிவு செய்வதும் என விற்பனை முதல் நாளே கலைக்கட்டுமாம். ஆனால் ஐபோன் 11 சீரிஸ் அறிமுகமாகி சில நாட்கள் ஆகியும் இதன் விற்பனை சூடுபிடிக்கவில்லையாம். 
 
ஆனால், இந்தியாவில் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை வாங்க முன்பதிவு செய்யும் போது ரூ.7,000 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.