1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2019 (15:08 IST)

ரூ.27,000 வரை குறைந்த ஆப்பிள் ஐபோன்(ஸ்) விலை!!

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மீதான விலையை அதிகப்படியாக குறைத்துள்ளது. 
 
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் தனது புதிய படைப்புகளான ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஐபோன்களை அறிமுகம் செய்தது. இந்த அறிமுக விழாவில் சில ஐபோன்களின் விலையையும் குறைப்பதாக அறிவித்தது. 
 
ஆம், இந்தியாவில் ஐபோன் XR மற்றும் ஐபோன் 8 சீரிஸ் ஐபோன்களின் விலையை அறிவித்தது. விலை குறைப்பை பற்றிய முழு விவரம் பின்வருமாறு... 
  • ஐபோன் XR 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மாடல்களின் விலை ரூ.27,000 குறைக்கப்பட்டுள்ளது.
  • ஐபோன் XS 64 GB மாடலின் விலை ரூ.11,000 குறைக்கப்பட்டுள்ளது.
  • ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் 64 ஜிபி வெர்ஷன்களின் விலை ரூ.20,000 குறைக்கப்பட்டுள்ளது.
  • ஐபோன் 7 சீரிஸ் மாடலின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மாடலின் விலை ரூ.8000 குறைக்கப்பட்டுள்ளது.