தாறுமாறாய் குறைந்தது ஐபோன்களின் விலை: முழு பட்டியல் இதோ!!

Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (17:42 IST)
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மீதான விலையை அதிகப்படியாக குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பின் முழு பட்டியல் பின்வருமாறு... 
 
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் தனது புதிய படைப்புகளான ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஐபோன்களை அறிமுகம் செய்தது. 
 
இந்த அறிமுக விழாவில் சில ஐபோன்களின் விலையையும் குறைப்பதாக அறிவித்தது. இந்த விலை குறிப்பின் முழு விவரம் பின்வருமாறு... 
  • ஐபோன் XS 64GB ரூ.99,900-க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.89,900-க்கு விற்கப்படுகிறது.  
  • ஐபோன் XS 256GB ரூ.1,14,900-க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.1,03,900-க்கு விற்கப்படுகிறது. 
  • ஐபோன் XR 64GB ரூ.59,900-க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.49,900-க்கு விற்கப்படுகிறது. 
  • ஐபோன் XR 128GB ரூ.64,900-க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.54,900-க்கு விற்கப்படுகிறது. 
  • ஐபோன் 8 Plus 64GB ரூ.69,900-க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.49,900-க்கு விற்கப்படுகிறது. 
  • ஐபோன் 8 64GB ரூ.59,900-க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.39,900-க்கு விற்கப்படுகிறது. 
  • ஐபோன் 7 Plus 32GB ரூ.49,900-க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.37,900-க்கு விற்கப்படுகிறது. 
  • ஐபோன் 7 Plus 128GB ரூ.59,900-க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.42,900-க்கு விற்கப்படுகிறது. 
  • ஐபோன் 7 32GB ரூ.39,900-க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.29,900-க்கு விற்கப்படுகிறது. 
  • ஐபோன் 7 128GB ரூ.49,900-க்கு விற்கப்பட்டது தற்போது ரூ.34,900-க்கு விற்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :