ஒரே படத்தில் எந்த ஈகோ இல்லாமல் வேலை செய்த ஐந்து கதாநாயகிகள்
செல்வா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் "நான் அவனில்லை" படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் துரித வேகத்தில் நடந்து வருகிறது. இந்த ஏற்கனவே பாலசந்தர் இயக்கிய "நான் அவனில்லை" படத்தின் ரீமேக் ஆகும்.
வருகிற 29 ம் தேதியோடு "நான் அவனில்லை" படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடுகிறதாம். ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். கதாநாயகன் ஜீவன் படத்தின் ஐந்து கதாநாயகிகளான சினேகா, நமீதா, மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்திசாவ்லா ஆகிய ஐந்து பேருடன் ஆடிப்பாடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்காக பிளேபாய் பார் செட்டப், கிராமிய சூழல் கொண்ட அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் கதாநாயகன் 5 கதாநாயகிகளுடன் குதுகலத்துடன் ஆடிப்பாடுகிறார். படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலே ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்வார்கள்.
எப்படி ஐந்து கதாநாயகிகளை பிரச்னையின்றி இயக்குனீர்கள் என்று செல்வாவிடம் கேட்டால் படத்தின் ஐந்து கதாநாயகிகள் இருந்தாலும் எல்லோருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஐந்து நாயகிகளும் எந்த ஈகோவும் இல்லாமல் பிரச்னையின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள் என்கிறார்.