1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

போலீஸ் கெடுபிடி - கஷ்டத்தில் திரைத்துறை!

போலீஸ் கெடுபிடி திரைத்துறை
உள்ளூரில் ஒரு படத்தை எடுப்பதற்குள் நாக்கு தள்ளிவிடு‌கிறது நம்மூர் இயக்குனர்களுக்கு. எங்கு கேமரா வைத்தாலும் காக்கி சட்டை ரூல்சுடன் குறுக்கே வந்துவிடுகிறது.

விஷாலின் சத்யம் படத்தின் விமான நிலைய காட்சிக்கு இந்தியாவில் அனுமதி கிடைக்காமல் துபாய் விமான நிலையத்தில் குறிப்பிட்ட காட்சியை எடுத்தனர். விஜயகாந்தின் அரசாங்கம் படத்திற்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.

சென்னை மாநகருக்குள் காலை நேரத்தில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்பது புதிய உத்தரவு. ராதாமோகனின் அபியும் நானும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்பட்டதுபோல், விஷ்ணுவர்தனின் சர்வம் படத்திற்கும் பாதிப்பு.

நேற்று காலை எலியட்ஸ் கடற்கரையில் படப்பிடிப்பிற்காக வந்தவர்களை புதிய உத்தரவை சொல்லி திருப்பி அனுப்பியது போலீஸ். இதனால், காலையில் நடக்கும் காட்சிகளை இரவு நடப்பதாக மாற்றி அமைக்க தீர்மானித்துள்ளாராம் விஷ்ணுவர்தன்.

சில காட்சிகளை மாற்றலாம். மெரீனாவில் சூரியன் உதிக்கும் காட்சியை எப்படி மாற்றுவது? உத்தரவை மறுபரிசீலனை செய்யுமா அரசு?