திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (21:05 IST)

ஆதிபுரூஸ் படத்திற்கு வசனம் எழுதியது மிகப்பெரிய தவறு- மனோஜ்

adipurush
பிரபாஸின் ஆதிபுரூஸ்  படத்திற்கு வசனம் எழுதியது மிகப்பெரிய தவறு என்று வசன கர்த்தா மனோஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில், பிரபாஸ்  நடிப்பில் உருவான படம் ஆதிபுரூஸ்.  இப்படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்திருந்தார். சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்திருந்தனர்.

கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி வெளியான இப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கான கடுமையான விமர்சனங்களை சந்தித்து, சர்ச்சையில் சிக்கியது.

இந்த நிலையில்,  இப்படத்தின் வசன கர்த்தான் மனோஜ்  இப்படத்தில் பணியாற்றியது பற்றி மனம் திறந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘’ஆதிபுரூஸ் படத்திற்கு வசனம் எழுதியது நான் செய்த பெரிய தவறு. இப்படம் வெளியான பின்னர் எனக்கு  நிறைய கொலை மிரட்டல்கள் வந்தன. அதற்குப் பயந்து நான் வெளி நாடு சென்றேன். இந்தச் சம்பவத்தில் இருந்து னான் நிறைய கற்றுக் கொண்டேன். இதுபோன்ற தவறை நான் இனிமேல் செய்ய மாட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.