திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (14:23 IST)

மீண்டும் தள்ளிப் போகிறதா பிரபாஸின் சலார்?

பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல கவனம் பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

பேன் இந்தியா படமாக சலார் ரிலீஸாகிறது. அதனால் அதிகளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் டிசம்பர் 22 ல் ஷாருக்கானின் டன்கி திரைப்படமும் ரிலீஸ் ஆவதால் இப்போது சலார் ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்க ஆலோசனை நடப்பதாக சொல்லப்படுகிறது.