1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (07:09 IST)

மாயமான நடிகர் பிரபாஸின் இன்ஸ்டா கணக்கு…!

பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். இந்த படம் டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதையடுத்து பிரபாஸ் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன் தீபிகா படுகோன், கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் திடீரென மாயமாகியுள்ளது. பல லட்சம் பாலோயர்களைக் கொண்ட அந்த அக்கவுண்ட்டை பிரபாஸ் முடக்கி வைத்துள்ளாரா அல்லது வேறு யாரேனும் ஹேக் செய்துள்ளார்களா என்பது பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை.