திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2023 (15:55 IST)

சலார் பட தமிழக உரிமையைக் கைப்பற்றிய ரெட்ஜெயிண்ட் மூவிஸ்

prabash -salaar
சலார் படத்தின் உரிமையை பிரபல ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
 
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் பிரபாஸ். இவர் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.
 
டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல கவனம் பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
 
பேன் இந்தியா படமாக சலார் ரிலீஸாகவுள்ளதால்  அதிகளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன. 

இந்த நிலையில், சலார் படத்தை தமிழகத்தில் வெளியீடுவதற்கான உரிமையைப் பெற்றது ரெட் ஜெயிண்ட் நிறுவனம்.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.