வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 10 ஜூலை 2019 (12:58 IST)

மழையால் கைவிடப்பட்ட ஆட்டங்கள் – இந்தியாவுக்காக வந்த ஹெலிகாப்டர்

நேற்று முடிந்திருக்க வேண்டிய இந்தியா- நியூஸிலாந்து ஆட்டங்கள் மழையின் காரணமாக இன்று விட்ட இடத்திலிருந்து தொடரும் என ஐசிசி அறிவித்திருக்கிறது. இந்நிலையில் உலக கோப்பை வரலாற்றில் இதற்கு முன்னரும் பல ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டிருக்கின்றன.

1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா- இலங்கை மோதியது. ஆட்டம் தொடங்கி 2 பந்துகளில் இந்தியா 1 ரன் பெற்றிருந்தபோது மழைபெய்ய தொடங்கியது. சில மணி நேரங்களில் மழை நின்றதும் மைதானம் ஈரமாக இருந்தது. உலக கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக அப்போதுதான் ஹெலிகாப்டரை பயன்படுத்தி மைதானத்தை காய வைத்தார்கள்.

பிறகு 20 ஓவராக குறைக்கப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு முடிவில்லை என அறிவிக்கப்பட்டது.

அதேபோல 1999ல் ஜிம்பாப்வே- நியூஸிலாந்து ஆட்டத்தின் போதும் நடந்தது. ஜிம்பாப்வே 50 ஓவர்களுக்கு 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவதாக களம் இறங்கியது நியூஸிலாந்து. 15 ஓவரில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் தள்ளிவைக்கப்பட்டது. பிறகு சில காரணங்களால் ஆட்டம் கைவிடப்பட்டு முடிவில்லை என அறிவிக்கப்பட்டது.