ஒரு ரன்னில் ஒரு விக்கெட்: வெடவெடத்து போன நியூஸிலாந்து

cricket
Last Updated: செவ்வாய், 9 ஜூலை 2019 (15:35 IST)
இந்தியா- நியூஸிலாந்து அரையிறுதி உலககோப்பை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு ரன் அடிப்பதற்குள்ளாகவே ஒரு விக்கெட்டை இழந்து பதற்றத்தில் இருக்கிறது நியூஸிலாந்து.

டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணியில் முதலாவதாக ஹென்றி நிக்கோலஸும், மார்ட்டின் கெப்டிலும் களம் இறங்கினர். முதல் ஓவரை புவனேஷ்குமார் வீசினார். அவரின் வேகபந்த சமாளிக்க முடியாமல் திணறியது நியூஸிலாந்து. அடுத்த ஓவர் பும்ரா வீசினார். அதிலும் ரன் எடுக்க முடியவில்லை. மூன்றாவது ஓவரில் கஷ்டபட்டு எப்படியோ ஒரு ரன்னை அடித்தார் குப்டில். அடுத்த பந்திலேயே அவர் அவுட் ஆனார். அடுத்ததாக கேப்டன் வில்லியம்சன் களம் இறங்கியுள்ளார்.

மூன்று ஓவர் முடிவில் வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்திருக்கிறது நியூஸிலாந்து. பும்ராவிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் சொன்னது பொய்க்கவில்லை.இதில் மேலும் படிக்கவும் :