செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 14 அக்டோபர் 2023 (13:24 IST)

சச்சின் சாதனையை நெருங்க போவது யார்? ரோகித் சர்மாவா? விராட் கோலியா? – இன்னைக்கு இருக்கு சம்பவம்!

ICT
இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா பல சாதனைகளை படைக்க காத்திருக்கிறது.



ஐசிசி உலக கோப்பை போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்புகள் அதிகமாகி விடுகின்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிகளுக்காக பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை பொறுத்தவரை பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வெல்ல முடிந்ததில்லை என்ற ஒரு கூற்று உள்ளது. அதை இன்று முறியடிக்க வேண்டும் என்ற தீவிர முனைப்பில் உள்ளது பாகிஸ்தான்.

அதேபோல ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்றவர் சச்சின் டெண்டுல்கர். 1992, 2003, 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். 2015ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை விராட் கோலி வென்றார். 2019ம் ஆண்டு போட்டியில் ஆட்டநாயகன் விருதை ரோகித் சர்மா வென்றார்.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவருமே களம் இறங்குகின்றனர். இரண்டாவது முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை வெல்லப்போவது யார் என இரு வீரர்களின் ரசிகர்களுமே தீவிரமாக எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.

Edit by Prasanth.K