1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

ஆர் சி பி அணிக்கு மட்டும் தோனி கேப்டனாக இருந்திருந்தால்…? – வாசிம் அக்ரம் கூறிய கருத்து!

எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஆர் சி பி பற்றி பேசியுள்ளார். அதில் “ஆர் சி பி அணிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான கோலி இருக்கிறார். ஆனாலும் ஆர் சி பியின் கோப்பை கனவு இன்னும் பலிக்கவில்லை. தோனி ஆர் சி பி அணிக்குக் கேப்டனாக இருந்திருந்தால் குறைந்தது மூன்று முறையாவது வென்றிருக்கும்” என தன்னுடைய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.