செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (15:52 IST)

டிராவிட் பத்தி சொல்லலை.. ஆனா தோனி இருப்பது நம்பிக்கை! – விராட் கோலி!

உலகக்கோப்பை டி20 போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ள நிலையில் அணி பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டது குறித்து தெரியாது என கோலி கூறியுள்ளார்.

உலகக்கோப்பை டி20 போட்டிகள் சென்ற ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் உலகக்கோப்பை டி20 போட்டி சுற்று ஆட்டங்கள் இன்று முதல் தொடங்குகின்றன.

இந்த உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 12 அணிகளில் ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. இந்த உலகக்கோப்பை டி20 போட்டியே தான் கேப்டனாக பதவி ஏற்கும் கடைசி போட்டி என விராட் கோலி முன்பே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உலகக்கோப்பை டி20 குறித்து பேசியுள்ள விராட் கோலி “புவனேஸ்வர் பார்ம் குறித்து கவலையில்லை. ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் சிறப்பாகவே உள்ளார். அஸ்வினின் பந்து வீச்சும் நம்பகமாகவே உள்ளது. தற்போது உலகக்கோப்பையை வெல்வதுதான் மற்ற அணிகளை போல எங்களது நோக்கமும். ராகுல் ட்ராவிட் அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தோனி அணியின் ஆலோசகராக இருப்பது கூடுதல் நம்பிக்கையை அளிக்கும்” எனக் கூறியுள்ளார்.