டி-20 உலகக் கோப்பை; இந்திய அணியின் புதிய சீருடை அறிமுகம்

india
sinoj| Last Modified புதன், 13 அக்டோபர் 2021 (16:07 IST)

உலகக் கோப்பை டி-20தொடரில் இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் உலகக் கோப்பை டி-20 தொடர் நடக்க உள்ள நிலையில், இதற்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்துள்ளது.


கேப்டன் விராட் கோலி, துணைகேப்டன் ரோஹித் சர்மா, கே. எல்.ராகுல், சூர்ய குமார் யாதவ், ரிஷாப்பந்த், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ,அஸ்வின்,
வருண் சி ஆகியோர் அடங்கிய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.


இந்நிலையில், இந்திய அணியின்முன்னாள் கேப்டன் தோனி, வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு வழிகாட்டியாகச் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்தது.

மேலும், டி-20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி நவம்பர்14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தொடரில் இந்திய அணி அக்டோபர் 24 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது குறிப்ப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :