1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. World Cup T20 strats today

இன்று முதல் தொடங்குகிறது உலகக்கோப்பை டி20 போட்டி! – கோப்பை வெல்லுமா இந்தியா?

World Cup T20
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக நடத்தாமல் ஒத்திவைக்கப்பட்ட உலகக்கோப்பை டி20 போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

உலகக்கோப்பை டி20 போட்டிகள் சென்ற ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் உலகக்கோப்பை டி20 போட்டி சுற்று ஆட்டங்கள் இன்று முதல் தொடங்குகின்றன.

இந்த உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 12 அணிகளில் ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில் மீதமுள்ள 4 இடங்களுக்காக 8 அணிகள் மோதிக் கொள்கின்றன. இதில் தேர்வாகும் 4 அணிகள் சூப்பர் 12 அணியில் தகுதி பெறும்.

இந்நிலையில் இன்றைய முதல் போட்டியில் பி பிரிவில் ஓமன் அணி பப்புவா நியூ கினியா அணியை எதிர்கொள்கிறது. 24ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
2023 வரை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்… கிரிக்கெட் ரசிகர்களை குஷியாக்கிய செய்தி!