செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 16 அக்டோபர் 2021 (08:23 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆகிறார் ராகுல் டிராவிட்!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிவடைவதை அடுத்து புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலம் டி20 உலக கோப்பை தொடர் உடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் பயிற்சியாளராக பதவியேற்பார் என்றும் இதுகுறித்து ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது 
 
டிராவிட் பயிற்சியாளராக வேண்டுமென பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா விருப்பம் தெரிவித்ததை அடுத்து தற்போது தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
வரும் நவம்பர் 17ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருப்பார் என்று கூறப்படுகிறது.