1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 4 மார்ச் 2023 (20:26 IST)

விராட் கோலி தன் குடும்பத்தினருடன் மகாகாளீஸ்வர் கோயிலில் வழிபாடு

-
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் மகாகாளிஸ்வர் கோயிலில் வழிபாடு செய்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இவர் தற்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இம்மாதம் 31 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல்-2023 தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் என்பதால், அவரது ரசிகர்கள் இன்னும் ஆர்வத்துடன் அவரது போட்டியைக் காணவுள்ளனர்.

இந்த நிலையில்,   நட்சத்திர வீரர் விராட் கோலி இன்றுதன் மனைவி அனுஷ்கா ஷர்மா, மகள் வமிகா ஆகியோருடன்  மத்தியபிரதேச  மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள  மகாகாளீஸ்வர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர்.
kohli,anushka sharma

கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, விராட் கோலி வெளியே வந்தபோது, அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அனுஷ்கா சர்மா, ’’இங்குத் தரிசனம் செய்ய வந்தோம்! தரிசனம் நன்றாகயிருந்தது’’ என்று கூறினார். விராட் கோலி, ’’ஜெய் மகாகாளீஸ்வர் … நன்றி’’ என்று தெரிவித்தார்.