தொடர்புடைய செய்திகள்
- கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!
- கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!
- விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்! இந்தியாவின் முக்கிய மைல்கல் சாதனை..!
- ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!
- என்னுடைய பேட்டிங் திருப்தி அளிக்கவில்லை… போட்டிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா கருத்து!
பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு எதிர்கால கேப்டன் தான்தான் என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
இந்நிலையில் தற்போது நடந்து வரும் மெல்போர்ன் டெஸ்ட்டில் அவர் 8 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை வழிநடத்தி வருகிறார். இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டியுள்ளார். இந்த தொடரில் அவர் மட்டும் 30 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் பும்ரா பற்றி பேசியுள்ள ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் “பும்ரா இந்தியாவின் செல்வாக்கு மிக்க நடிகர். அவர் எங்களுக்கு அதிக வேலை வைக்கிறார்” எனப் பாராட்டியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்