தொடர்புடைய செய்திகள்
- ஜெய்ஸ்வால் போராட்டம் வீண்.. இந்தியா தோல்வி..!
- இன்று ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் ஷர்மா?
- 90 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனையைப் படைத்த இந்தியா vs ஆஸ்திரேலியா பாக்ஸிங் டே டெஸ்ட்!
- 6 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாற்றம்… ஒற்றை ஆளாக டிரா செய்ய போராடும் ஜெய்ஸ்வால்!
- 2024 ஆம் ஆண்டில் அதிக பந்துகள் வீசப்பட்ட போட்டியாக அமைந்த பாக்ஸிங் டே டெஸ்ட்!
கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமாக சொதப்பி வருகிறது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸி அணி முன்னிலையில் உள்ளது.
இந்த தொடரில் கோலி தொடர்ந்து சொதப்பி வருகிறார். முதல் போட்டியில் அடித்த ஒரு சதத்தைத் தவிர மற்ற இன்னிங்ஸ்களில் அவர் சோபிக்கவில்லை. அதிலும் ஒரே மாதிரியாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில் எட்ஜ் ஆகி அவுட் ஆகி வருகிறார்.
இது சம்மந்தமாக பல முன்னணி வீரர்கள் கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை விட்டு கூடுதல் ரன்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் கோலி பிடிவாதமாக அந்த பந்துகளை ஆடி விக்கெட்டை இழந்து வருகிறார் என்பதுதான் சோகம்.
இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் வீரரான சைமன் காடிச் “கிங் (கோலி) இறந்துவிட்டார். புதிய கிங் (பும்ரா) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்” எனக் கூறியுள்ளார். இந்த தொடரில் 30 விக்கெட்கள் வீழ்த்தி பும்ரா அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்