வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 22 ஜனவரி 2025 (07:39 IST)

இந்தியா- இங்கிலாந்து போட்டியைக் காண சென்னை மெட்ரோவில் இலவசப் பயணம்!

இந்தியா- இங்கிலாந்து போட்டியைக் காண சென்னை மெட்ரோவில் இலவசப் பயணம்!
இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இழந்த பின்னர் அடுத்து இங்கிலாந்து அணியுடன் டி 20 போட்டித் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இரண்டாவது போட்டி வரும் 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில் இந்த போட்டியைக் காண வரும் ரசிகர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

போட்டிக்கான டிக்கெட்டைக் காட்டி மெட்ரோவில் பயணித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.