செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 8 பிப்ரவரி 2025 (12:37 IST)

Prison break சீரியல் கதாநாயகனின் ஸ்டைலைப் பின்பற்றும் ரஷீத் கான்!

Prison break சீரியல் கதாநாயகனின் ஸ்டைலைப் பின்பற்றும் ரஷீத் கான்!
சில ஆண்டுகளுக்கு முன் சர்வதேசக் கிரிக்கெட்டில் டி 20 போட்டிகளில் குறைந்த வயதில் 100 விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார் ரஷீத் கான். இவர் 53 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.. அதே போல குறைந்த வயதில் ஒட்டுமொத்தமாக டி 20 போட்டிகளில் 400 விக்கெட்களை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையும் ரஷீத் கான் வசம்தான் உள்ளது.

இந்நிலையில் தற்போது டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ரஷீத் கான் 633 விக்கெட்களோடு முதலிடத்தில் இருக்க டுவெய்ன் பிராவோ 631 விக்கெட்கள் சேர்த்து இரண்டாம் இடத்தில் உள்ளார். தற்போது நடைபெற்று வரும் SA 20 லீக்கில் அவர் மும்பை அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் கேப்டனாக திட்டங்களை செயல்படுத்துவது குறித்து பேசியுள்ளார். அதில் “நான் இப்போது Prison Break சீரிஸைப் பார்த்து வருகிறேன். அதில் இருந்து எப்படி சவாலான சூழலில் இருந்து வெளிவருவது என்பதைக் கற்று வருகிறேன்.  கேப்டனாக சில நேரங்களில் திட்டங்களை மறந்துவிட நேர்கிறது. அதனால் அந்த சீரிஸின் கதாநாயகன் போல கையில் திட்டங்களை எழுதி வைத்துக் கொண்டு செயல்படுத்தி வருகிறேன்.” எனக் கூறியுள்ளார்.