எங்க ஹிட்டு எப்போதும் முத போட்டிய சாமிக்கு விட்ருவாப்புல… நாளுக்கு நாள் மோசமாகும் ரோஹித் பேட்டிங்!
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நேற்று நாக்பூரில் முதல் ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து 248 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஆடிய இந்திய 39 ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. இந்திய அணி சார்பில் ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தா. அவர் 7 பந்துகள் மட்டுமே சந்தித்து 2 ரன்கள் சேர்த்தார். கடந்த 16 இன்னிங்ஸ்களாக ரோஹித் ஷர்மா விளையாடிய சர்வதேசப் போட்டிகளில் அவர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழப்பது இது பத்தாவது முறையாகும்.