முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே? – பஞ்சாப் அணியுடன் மோதல்
இன்றைய ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதிக் கொள்ள உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் மும்முரமாக நடந்து வருகிறது. இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், பஞ்சாப் கிங்ஸ் அணி மோத உள்ளது. இந்த சீசனின் இந்த போட்டி மூலமாக இரண்டாவது முறையாக இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன.
முந்தைய ஆட்டத்தில் 180 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, சென்னையை 126 ரன்னில் மடக்கியது. தற்போதைய நிலவரப்படி 7 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் அணி 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று எட்டாவது இடத்தில் உள்ளது. தரவரிசையில் அருகருகே உள்ள இரண்டு அணிகளும் யார் முந்தி செல்வது என்பதில் இன்று பலத்த பலபரீட்சை செய்ய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.