செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated: வியாழன், 10 நவம்பர் 2022 (16:51 IST)

டி- 20 உலக கோப்பை: ஜோஸ் - அலெக்ஸ் அதிரடியால் இங்கிலாந்து வெற்றி! இறுதிப் போட்டிக்குத் தகுதி!

england cricket
டி-20 உலகக் கோப்பை - இன்றைய அரையிறுதிப் போட்டி ஆட்டத்தில், இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி நடைபெற்றது.

இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. இதில், இந்திய வீரர்கள் கோலி மற்றும் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

அதன் பின்னர், 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் விக்கெட்டே இழக்காமல் அதிரடியாக விளையாடினர்.

எப்படியும் ஜெயிக்க வேண்டுமென்ற உத்வேகத்துடன் விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இருவரும் இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்தனர்.

எனவே, வெறும் 16 ஓவர்களில், இங்கிலாந்து அணி 170 ரன்கள் அடித்து சூப்பர் வெற்றி பெற்றது. இதில், அலெக்ஸ் 47 பந்துகளில் 86 ரன்களும், ஜோஸ் 49 பந்துகளில்  80  ரன்களும் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

இந்திய வீரர்கள் விக்கெட் வீழ்த்தாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதுடன், இந்திய அணி பந்து வீச்சில் மேலும் கவனம் செலுத்த வேண்டுமென கருத்துகள் கூறி வருகின்றனர்.

இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது இங்கிலாந்து அணி.

Edited by Sinoj