ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 4 நவம்பர் 2022 (12:44 IST)

நியூசிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய அயர்லாந்து பவுலர் ஜோஸ்வா லிட்டில்!

நியுசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் சூப்பர் 12 லீக் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணி 185 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து சொதப்பி வந்த அந்த அணியின் கேப்டன் இந்த இன்னிங்ஸில் 35 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார்.  சிறப்பாக விளையாடிய நியுசிலாந்து அணி வீரர்களை 19 ஆவது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் அயர்லாந்து பவுலர் ஜோஸ்வா லிட்டில்.

இந்த ஓவரில் 2 ஆவது பந்தில் கேன் வில்லியம்சனும்,  அடுத்தடுத்த பந்துகளில் நீஷம் மற்றும் சாண்ட்னர் ஆகியோரும் அவுட் ஆக, உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் அயர்லாந்து பந்துவீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.