1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: வியாழன், 10 நவம்பர் 2022 (16:42 IST)

10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து… நடையைக் கட்டிய இந்தியா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இன்று நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோலி மற்றும் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் விக்கெட்டே இழக்காமல் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 80 ரன்களும்,  அலக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 86 ரன்களும் சேர்த்து சாதனை வெற்றியைப் பெற்றனர்.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டி வரும்  ஞாயிற்றுக் கிழமை நடக்க உள்ளது.