திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 நவம்பர் 2022 (17:21 IST)

இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிச்சயம் தவிர்ப்போம்: ஜோஸ் பட்லர்

Butler
உலகக் கோப்பை டி20 இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதலை நாங்கள் தவிர்ப்போம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
 
இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் நாளை இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 2வது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதாமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்
 
அரையிறுதியில் நாங்கள் இந்தியாவை எதிர்கொள்ள உற்சாகமாக இருக்கிறோம் என்றும் உலகின் மிகச் சிறந்த மைதானத்தில் மிகச் சிறந்த அணியை எதிர்கொள்ள இருக்கிறோம் என்றாலும் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்
 
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியை மோதுவதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என்றும் ஆகவே அது நடக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran