டாஸ் வென்ற இலங்கை; பேட்டிங்கில் இறங்கிய இந்தியா
இலங்கை -இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டியான 3 ஆவது டி20 போட்டி தொடங்கிய நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையேயான டி20 தொடரின் 3 ஆவது மற்றும் கடைசி போட்டி தற்போது தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்ததை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கியுள்ளனர். எந்த அணி இத்தொடரை வெல்லப்போவது என பொறுத்திருந்து பார்க்கலாம்.