வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (18:19 IST)

WorldCup-2023 தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா? ஐசிசி அறிவிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெல்லும் அணிகளுக்கான பரிசுத்தொகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரை காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

உலகக் கோப்பை இந்தியாவில்  நடக்க உள்ளதால்  இப்போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கி,  ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான தீம் பாடல் ரண்வீர் சிங் நடிப்பில் வெளியானது.

இந்த நிலையில்  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணி வீரர்களை அறிவித்து வருகின்றன. இன்று   பாகிஸ்தான் அணி தங்கள் வீரர்களி பெயரை அறிவித்தது.

இந்த நிலையில், உலகக் கோப்பை2023 தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

அதேபோல் 2 வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.16,50 கோடியும், அரையிறுதியில் தோற்கும் அணிக்கு ரூ..50 கோடி பரிசாக வழங்கப்படும் என்று ஐசிசி அமைப்பு இன்று அறிவித்துள்ளது.