செவ்வாய், 5 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (13:39 IST)

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு! அணியில் யார் யாருக்கு இடம்?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. செப்டம்பர் 22, 24, 27 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதில் பல மூத்த வீரர்கள் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளனர். கே எல் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்நிலையில் சற்று முன்னர் மொஹாலி மைதானத்தில் இந்த போட்டிக்கான டாஸ் வீசப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே எல் ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி
ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல்(w/c), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி

ஆஸ்திரேலிய அணி
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷான், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ்(w), மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ ஷார்ட், பாட் கம்மின்ஸ்(c), சீன் அபோட், ஆடம் ஜாம்பா