செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (18:03 IST)

கிரிக்கெட் கிரவுண்டிற்குள் திடீர் பாம்பு.. வைரல் வீடியோ

ரஞ்சி டிரோஃபிக்கான போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மைதானத்திற்குள் பாம்பு புகுந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள டாக்டர் கோகரஜூ லிலா கங்காராஜூ கிரிக்கெட் மைதானத்தில், ரஞ்சி டிராஃபிக்கான ஆந்திரா மற்றும் விபர்தா அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அப்போது மைதானத்திற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது தெரியவந்தது. அந்த நேரத்தில் வீரர்கள் யாரும் இல்லை. பின்பு மைதான ஊழியர்கள் பாம்பினை மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் போட்டி சில நேரம் தடைப்பட்டது. தீடீரென மைதானத்தில் பாம்பு நுழைந்தது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.