எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்… தோல்விக்குப் பின் ரோஹித் ஷர்மா வருத்தம்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஒரு டி 20 போன்ற பரபரப்புடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறிய போது இந்திய அணிக்கு வெற்றிப் பெறும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அதை இந்திய அணி கோட்டை விட்டது. ஆஸி அணியின் பின்வரிசை ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று வலுவான இலக்கை நிர்ணயித்தார்கள். இதுதான் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக பாரக்கப்படுகிறது.
இந்நிலையில் தோல்விக்குப் பின்னர் பேசிய இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா “ரொம்பவும் அதிருப்தியாக உள்ளது. நாங்கள் கடைசிவரை போராடினோம். எங்களால் முடிந்த அளவுக்குப் போராடினோம். இரண்டாவது இன்னிங்ஸில் எங்களுக்கு சில வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் ஆஸி அணி கடைசி விக்கெட்டுக்கு நிலைத்து நின்று நிறைய ரன்களை சேர்த்தது. அதுதான் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.” எனக் கூறியுள்ளார்.