வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 டிசம்பர் 2019 (17:16 IST)

’விடாட் கோலி’ தனது ஆட்டத்தின் மூலம் கொன்று விட்டார் - சூப்பர் ஸ்டார் டுவீட்

நேற்றைய டி -20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விராட் கோலியை பாராட்டி அமிதாப் பச்சன் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
நேற்று, ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் நிர்ணயித்த 208 என்ற இமாலய ரன் இலக்கை, விராட் கோலி, தனது திறமையால் வழிநடத்தி அணிக்கு வெற்றி தேடி தந்தார்.
 
இந்நிலையில், இந்த வெற்றிக்கு காரணமான விராட் கோலி குறித்து ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளதாவது :
 
உங்களிடம் எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்... விராட் கோலியை கிண்டல் செய்யாதே என்று. எனக்கு ஒரு சீட்டை எழுதிக் கொடுத்தார்கள்.. மே.தீ அணியின் முகத்தைப் பாருங்கள் விராட் எப்படி கொன்று விட்டார்  என என்று தெரிவித்துள்ளார்.