திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 6 செப்டம்பர் 2023 (14:16 IST)

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் மேலும் முன்னேற்றம்!

இந்திய அணியில் மிகச்சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக உருவாகி வருகிறார் ஷுப்மன் கில். ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும் கில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இதனால் இந்திய அணியில் அவர் நிரந்தர வீரராக மாறியுள்ளார். தற்போது நடந்து வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் அவர் மிகச்சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

இந்த இன்னிங்ஸ் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இப்போது அவர் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் சார்பாக தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் வீரராக அவர் இப்போது உள்ளார்.